இறைச்சி விற்பனையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்
பொதுமக்களுக்கு சுத்தமானதும், சுகாதாரமுமான உணவுகளை வழங்கும் பொருட்டு கல்முனை மாநரக சபைக்குட்பட்ட இறைச்சி விற்பனையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர முதல்வரின் வழிகாட்டலில் கல்முனை மாநரக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநரக மிருக வைத்திய அதிகாரி டவுள்யூ.ஏ.வடபொல, சாய்ந்தமருது மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறூக், கல்முனை மாநகர பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.அரியராஜா மற்றும் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேச இறைச்சி விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது இறைச்சிக் கடைகள் நவீனமான முறையில் மாற்றியமைத்தல், இறைச்சி விற்பனையில் ஈடுபடும் ஊழியர்கள் மாநகர சபையினால் அறிமுகம் செய்யப்படும் சீருடையினை அணிதல், சூழலை மாசுபடுத்தாத முறையில் கழிவுகள் அகற்றுதல், இறைச்சி விற்பனையின் சட்ட திட்டங்களை பின்பற்றி செயற்படுதல் என்பன பற்றி விரிவாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிரினால் விளக்கமளிக்கப்பட்டது.



சுகாதார கேடுகள் அனைத்தும் இலஞ்சம் வாங்கும் பொது சுகாதார பரிசோதகர்களால்தான்.இறைச்சிக்கடைகளுக்கு வந்து,வந்த மோட்டர் சைக்கிளை விட்டும் இறங்காமல் நின்ற நிலையிலேயே,பலாத்காரமாக ஓசியில் இறைச்சி கேட்டும்,கொடுக்கா விட்டால்,அல்லது கடை முதலாளிக்கு அவர் யார் என்று அடையாளம் தெறியாவிட்டால்,வந்த பொது சுகாதார பரிசோதகரே அவரை யார் என வெளிப்படியாக சொல்லிவிட்டு இலஞ்சமாக கொள்ளையடித்து செல்வார்கள்.தரம் கெட்ட,இலஞ்சம் கொடுத்து தொழில் வாங்கினால்,இப்படிதான் எல்லாமே இலஞ்சத்தில் செல்லும்.நீங்கள் பொருப்பு வாய்ந்த அதிகாரிகள் சரியாக உங்கள் கடமையை செய்தால்,நேர்மையாக செயட்பட்டால்,மக்கள் உங்களை வழிப்படுவர்.
ReplyDelete