பூமியில் விழும் என அச்சப்பட்ட ரஷ்ய செய்மதி, சவூதி அரேபியாவில் விழுந்ததா..?
பூமியில் விழும் என்று அச்சப்பட்ட ரஷ்யாவின் சோவியட் காலத்து இராணுவ செய்மதி வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகி விட்டதாக ரஷ்ய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கொஸ்மோஸ் 1220 என்ற இந்த செய்மதி ரஷ்ய நேரப்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.58க்கு பூமியின் வளிமண்டலத் திற்குள் நுழைந்து எரிந்து சாம்பலானதாக ரஷ்ய விண்வெளி கட்டளையகத்தை மேற் கோள்காட்டி செய்தி, வெளி யிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த செய்மதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடக்கு சவூதி அரேபியாவில் விழுந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. கொஸ்லோஸ் 1220 செய்மதி துண்டுகள் சவூதியில் விழுவதை அங் கிருக்கும் பலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
"ரொக்கெட் ஞாயிறு காலை சுமார் 4.40 மணியளவில் விழுந்தது. எனினும் இது ரொக்கெட்டா அல்லது ரொக்கெட் குப்பையா என்பதை பிரித்தறிய முடியாதுள்ளது" என்று ஜித்தாவில் இருக்கும் வானவியல் மையத்தின் இயக்குனர் மொஹமட் அவ்தா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு சவூதியில் இருக்கும் பலரும் தமது தலைக்கு மேலால் ரொக்கெட் ஒன்று விழுவதை பார்த்துள்ளனர். ஜோர்தானில் இருக்கும் மக்களுக்கும் இதனை பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் பசுபிக் சமுத்திரத்தில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த செய்மதி குறித்து ரஷ்ய இராணுவம் கண்காணிப்பு செலுத்திவந்ததாக ரஷ்யாவின் ஆர். ஐ. ஏ. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. செய்மதிகளை கண்காணிக்கும் என் 2 வை 3 என்ற இணையதளம், கொஸ்மோஸ் 1220 செய்மதி ஞாயிற்றுக்கிழமை காலை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
கொஸ்மோஸ் 1220 செய்மதி 4150 கிலோ கிராம் பாரம் கொண்டது என்று நாஸா குறிப்பிட்டுள்ளது. இந்த செய்மதி 1980 ஆம் ஆண்டு ஏவப்பட்டுள்ளது.
வலம் வந்துகொண்டிருக்கும் விண்வெளி குப்பைகளைக் குறைக்கும் நோக்கில் நவீன செய்மதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி இந்த செய்மதிகள் பயன்பாட்டை இழந்ததும் அழிவடையும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த கொஸ்மோஸ் 1220 செய்மதி இந்த நெறிமுறை கடைப் பிடிக்கப்படும் முன்னர் அனுப் பப்பட்டதாகும்.
எனினும் மனிதனினால் உருவாக்கப்பட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான குப்பை துண்டுகள் பூமியை வளம் வந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

Post a Comment