Header Ads



பௌத்த பிக்குவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் – பொதுபல சேனா


(Gtn) பௌத்த பிக்கு ஓருவரை பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் திட்டம் தொடர்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பௌத்த பிக்கு ஏனைய மத அமைப்புக்களின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என பொதுபல சேனா அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து மாதுலுவே சோபித தேரர் ஆராய்ந்து வருவதாகத் தமக்கு தகவல் கிட்டியுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மாதுலுவே சோபித தேரர் மேற்குலக நாடுகள் மற்றும் கிறிஸ்தவ அழுத்தங்களின்றி செயற்பட்டால் பூரணமாக ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தவறினால், மாதுலுவே சோபித தேரருக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டு, பாராளுமன்ற ஆட்சி முறைமை ஒன்றை நிறுவும் வரையில் ஆட்சிப் பொறுப்பை வகிக்கத் தயார் என மாதுலுவே சோபித தேரர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பொடாங்கொய்யா... பெரிய சுதந்திரத்துக்காகப்போராடிய தலைவன் எண்ட எண்ணமோ....

    ReplyDelete

Powered by Blogger.