Header Ads



அரச பாடசாலைகளில் 72 வீதமானோர் பெண் ஆசிரியர்கள்


நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் 72 சத வீதமானோர் பெண்கள் என கல்வி அமைச்சின் புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. 

நாடுபூராகவும் மொத்தமாக 2 இலட்சத்து 23 ஆயிரத்து 333 பேர் ஆசிரியர்களாகக் கடமை புரிகின்றனர். இவர்களில் 1 இலட்சத்து 60 ஆயிரத்து 544 பேர் பெண்களாவர். 62 ஆயிரத்து 789 பேர் (28 %) ஆண்களாவர்.

வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 5435 பெண்களும் 1956 ஆண்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1187 பெண்களும் 547 ஆண்களும், மன்னார் மாவட்டத்தில் 1200 பெண்களும் 666 ஆண்களும், வவுனியா மாவட்டத்தில் 1674 பெண்களும் 772 ஆண்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 877 பெண்களும் 514 ஆண்களும் கல்வி கற்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.