இலங்கையில் இந்த மாதத்தில் பேஸ்புக்கினால் 3 பேர் தற்கொலை
பேஸ்புக் சமூக வலைதளத்தில் தமது புகைப்படங்களை தரவேற்றம் செய்யும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவற்துறை திணைக்களம் கோரியுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இந்த மாதத்தில் பேஸ்புக் நட்பின் காரணமாக மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதற்கு தங்களின் புகைப்படங்களை தரவேற்றம் செய்திருந்தமையே பிரதான காரணமாக அமைந்திருந்தது.
பேஸ்புக்கில் தரவேற்றம் செய்யப்படுகின்ற புகைப்படங்களை கொண்டு, சில சமூக விரோதிகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே முடிந்தவரையில் புகைப்படங்களை தரவேற்றம் செய்யாதிருப்பதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment