சிங்கள ராவயவின் போராட்டம் முடிந்தது - 3 பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதி
பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பின் மூன்று பிக்குகள் மேற்கொண்டு வந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் கைவிட்டப்பட்டது.
பசுவதைக்கு எதிரான சட்ட திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவர் எழுத்து மூலம் உறுதி வழங்கியதைத் தொடர்ந்து அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பிக்குகளும் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16ம் திகதி முதல் அவர்கள் கொழும்பு கோட்டை தொடரூந்து திணைக்களத்துக்கு முன்னால் இந்த உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment