கொழும்பில் உறுப்பினர் தொகை குறைந்தது - கம்பஹா, களுத்துறையில் அதிகரித்தது
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்களுக்காக, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உறுப்பினர்கள் தொகை குறைவடைந்து கம்பஹா களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர் தொகை அதிகரித்துள்ளது.
இதனை தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மூன்று உறுப்புரிமைகள் குறைவடைந்துள்ளதுடன் அதில் இரண்டு உறுப்புரிமை களுத்துறைக்கும் ஒரு உறுப்புரிமை கம்பஹாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் 43 உறுப்பினர்களாக காணப்பட்ட அதேவேளை, இந்த முறை தேர்தலில் அது 40ஆக குறைவடைந்துள்ளது
களுத்துறை மாவட்டத்தில் 20 உறுப்பினர்கள் கிடைக்க பெற்றதுடன் அது தற்சமயம் 22 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment