Header Ads



இலங்கை பெண் விவகாரம் - குவைத்தில் எகிப்தியருக்கு மரண தண்டனை

(Tm)இலங்கைப் பெண்ணொருவரால் நண்பர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் குற்றவாளியான மற்றைய நண்பனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது.

குவைத்தில் பணியாற்றிவரும் எகிப்து நாட்டுப் பிரஜையொருவருடன் மற்றுமொரு எகிப்து பிரஜை நண்பராகியுள்ளார்.

இந்நிலையில், அந்த எகிப்து பிரஜைகளில் ஒருவர் இலங்கைப் பெண்ணொருவருடன் நட்பு கொண்டதை அடுத்து எகிப்து பிரஜைகளிருவருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

சத்தாதியா பல்கலைக்கழகத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இந்த மோதலில் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் கடுமையான காயங்களுக்கு உள்ளான நண்பர்களில் ஒருவர், சுமார் இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் அரைவாசிக்கு புதைக்கப்பட்டிருந்த நிலையில் குவைத் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குற்றவாளியான எகிப்து பிரஜைக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

No comments

Powered by Blogger.