Header Ads



ஓவத்தை கிராமத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவி


(பாஸில்)

மாவனல்லைக்கு மிகவும் அன்மையிலே அமைந்திருக்கின்ற ஒரு சிறிய கிராமமே ஓவத்தை கிராமமாகும். இக்கிராமத்தில் அல்லாஹ்வின் திருப்தியை இலக்காகக்கொண்டு பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்ற வசதி குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கின்ற நிகழ்வு இம்முறை எமது கிராமத்திலே இருக்கின்ற முஸ்லிம்,சிங்கள,தமிழ் மாணவர்களையும் சேர்த்து மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. இப்பொதிகள் 70 க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்நிகழ்ச்சியின் இறுதியில் கருத்துத் தெரிவித்த (சிங்கள தேசிய பாடசாலையொன்றிலே சிறப்பாக கல்வி கற்கின்ற ஒரு) மாணவர், வசதி குறைந்த மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் இது எம்மை கல்வி கற்க ஆர்வப்படுத்துகிறது என்றும் இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் எம் சமூகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறினார். 


No comments

Powered by Blogger.