Header Ads



விளையாட்டின் ஊடாகக் கட்டப்படும் இணைப்புப் பாலமானது மதங்களையும், இனங்களையும் இல்லாமல் செய்யும்

போர் முடிவடைந்த பின்னர் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ­, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஜெனிவாவுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை புதிய விளையாட்டுத் திடலைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்த பின்னர் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. 

ஜெனிவாவில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இலங்கை தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கின்றது. எப்படியிருப்பினும் நாடு சமாதானத்தின் பலாபலனை அனுபவிக்கிறது என்றார் ஜனாதிபதி.

விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய ஒற்றுமையைப் பரப்பும் ஒரு மொழியாக விளையாட்டைப் பயன்படுத்த வேண்டும். விளையாட்டின் ஊடாகக் கட்டப்படும் இணைப்புப் பாலமானது மதங்களையும், இனங்களையும் இல்லாமல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.