தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பொன்விழா - பிரதேசமெங்கும் கோலாகலம்
கண்டி தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பொன்விழா நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி) கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வையொட்டி பிரதேசமெங்கும் கோலாகலமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு அமர்வுகளாக நடைபெறவிருக்கும் இப் பொன்விழா வைபவத்தின் முதல் அமர்வு காலை 9.00 - 12.00 மணி வரையும், இரண்டாம் அமர்வானது மாலை 2.00 - 5.00 மணி வரையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் ஐ.ஆ. ஜெமீல் தலைமையில் நடைபெறும் இவ்விழாவின் முதலாம் அமர்வில் பிரதம அதிதியாக கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ அதிதிகளாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர், மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக, மத்திய மாகாண சபைத் தலைவரும் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளருமான மஹிந்த அபேகோன், பிரதமரின் புதல்வரும் அந்தரங்கச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அனுராத ஜயரத்ன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான உவைஸ், காமினி விஜய பண்டார ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் விசேட அதிதிகளாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.பீ.ரீ.கே. ஏக்கநாயக்க, தெல்தோட்டை பிரதேச செயலாளர் ஜே.பீ.யூ.கே.ஜயரத்ன, கம்பளை பொலிஸ் மா அதிபர் காமினி பெரேரா, கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டபில்யூ.எம்.விஜேரத்ன, மத்திய மாகாண முஸ்லிம் பிரிவு பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.என்.நஸார், கண்டி வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ தரன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹம்ஸா லெப்பே ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவின் இரண்டாம் அமர்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக் ஷ்மன் கிரியல்லவும் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீமும் விசேட அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஹேவாஹெட்ட தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமான சானக அயிலப்பெரும, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜே.ஜெய்னுல்லாப்தீன்(லாபீர் ஹாஜி), பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை தலைவர் ராஜநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரூபா ஸ்ரீயானி டெனியல் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன் கல்லூரியின் ஆரம்ப ஸ்தாபகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன் முன்னாள் அதிபர்கள், பாடசாலை சங்க உறுப்பினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், தற்போது பாடசாலையில் சேவையாற்றும் அதிபர், ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
கல்லூரியிலிருந்து இதுவரை பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கல்வியியற் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளன.
இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.

Post a Comment