Header Ads



'மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்தால் அளவிட முடியாத அழிவு ஏற்பட வாய்ப்பு'

(Adt) வேறு மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்தால் அளவிட முடியாத அழிவு இலங்கையில் ஏற்பட வாய்ப்புள்ளதென சர்வமத இணக்க சமூகம் தெரிவித்துள்ளது. 

அடிக்கடி மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட காரணம் நீதியை செயற்படுத்த வேண்டியவர்கள் அதனை சரியாக செய்யாததால் தான் என பலர் நினைப்பதாக அந்த சமூகம் குறிப்பிட்டுள்ளது. 

இதனை உள்நாட்டு ஊடகங்கள் சரியாக வெளிப்படுத்துவது இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சர்வமத இணக்க சமூக அமைப்பில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.