சிறீலங்கா நிருவாக சேவைச்சங்கத்தின் 31ஆவது வருடாந்த மகா சபைக்கூட்டம் பிற்போடப்பட்டது
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சிறீலங்கா நிருவாக சேவைச்சங்கத்தின் 31ஆவது வருடாந்த மகா சபைக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2014.01.30ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறீ லங்கா நிருவாக சேவைச்சங்கத்தின் 31ஆவது வருடாந்த மகா சபைக்கூட்டமும் பொன்விழாவும் பிற்போடப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் செயலாளர் ஆர்.ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இத்தினங்களில் ஏற்றுக்காள்ளப்படுவதைக்கருத்திற்கொண்டு இக்கூட்டம் மற்றும் பொன்விழாக்கள்என்பன பிற்போடப்பட்டுள்ளன.
இவை எதிர்வரும் 2014.02.17ஆம் திகதி பண்டார நாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment