Header Ads



இலங்கையிலிருந்து தங்க கடத்தலில் ஈடுபடும் பிரதான சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

(Sfm) இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தங்க கடத்தலில் ஈடுபடும் பிரதான சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

பிரதான சந்தேகத்திற்குரியவர்கள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்துவது கடந்த சில காலங்களாக அதிகரித்துள்ளன.

எனினும் இது குறித்து பிரதான சந்தேகத்திற்குரியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, சட்டவிரோத தங்க கடத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களை அடுத்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அணிந்துச் செல்லக் கூடிய தங்க ஆபரணங்கள்  தொடர்பில் புதிய விதியை அமுலாக்க சுங்க திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.