Header Ads



கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக சபை, ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று 25.12.2013ஆந் திகதி புதன்கிழமை மட்ஃமமஃமீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கே.சீ.டீ.ஏ.யின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிரதம வளவாளராக வந்தாறுமூலை,கிழக்குப்பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) (எம்.ஏ.) அவர்கள் கலந்து கொண்டு நிருவாக சபையின் பொறுப்புக்கள் எனும் தலைப்பில் இச்செயலமர்வை நடாத்தினார்.

இந்நிகழ்வின் போது கே.சீ.டீ.ஏ.யினால் பிரதேசத்தின் கல்வி மற்றும் பண்பாடுகள் தொடர்பான மகஜர்கள் கையளிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், மீராவோடை மீரா ஜ}ம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கiயாளர் சபையின் தலைவருமான கொளரவ கே.பீ.எஸ். ஹமீட் அவர்களிடம் மட்ஃமமஃமீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் ஆசிரியரும், கே.சீ.டீ.ஏ.யின் ஆலோசகருமான ஜனாப் எம்.எச்.எம். ஹக்கீம் அவர்கள் மகஜரை கையளிப்பதையும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தரும், கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுத்தலைவருமான அஷ்ஷெ;ய்க் ஏ.எல். பீர்முஹம்மது (காஸிமி) (எம்.ஏ.) அவர்களிடம் மட்ஃமமஃமீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் பிரதி அதிபரும், கே.சீ.டீ.ஏ.யின் ஆலோசகருமான ஜனாப் எம்.பீ. முபாறக் அவர்கள் மகஜர் கையளிப்பதையும், கிழக்குப்பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) (எம்.ஏ.) அவர்களிடம் கே.சீ.டீ.ஏ.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாப் எம்.எம்.எம். பைறூஸ் அவர்கள் மகஜரை கையளிப்பதையும், இச்செயலமர்வில் கலந்து கொண்ட ஏனைய நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினரகளையும் காணலாம்.

தகவல்
ஊடகப்பிரிவு
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம். 

No comments

Powered by Blogger.