Header Ads



அமெரிக்க ஓட்டல்களில் ஆயிரக் கணக்கான டாலர்கள் டிப்ஸ் தரும் மர்ம மனிதனால் பரபரப்பு ..!

அமெரிக்க ஓட்டல்களில் ஆயிரக் கணக்கான டாலர்கள் டிப்ஸ் தரும் மர்ம மனிதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாடிக்கையாளர் யார் என்று அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர். சாப்பிட்ட பின் ஓட்டல்களில் நாம் எவ்வளவு டிப்ஸ் வைப்போம்? மீறிப்போனால் பத்து ரூபாய். அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவில் ஒரு மர்ம வாடிக்கையாளர் தான் போகும் உணவு விடுதிகளில் எல்லாம் 1,000 முதல் 5,000 டாலர்கள் வரை டிப்ஸ் வைத்திருக்கிறார். ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்றால் இன்றைக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,000.  

முதலில் லாஸ் ஏஞ்ஜல்சில் இருக்கும் ஆன் ஆர்பர் ஓட்டலில் சாப்பிட்ட மர்ம மனிதன் 1,000 டாலர்கள் டிப்ஸ் வைத்துள்ளார். பில்லில் ‘ஜீசஸ்-க்காக டிப்ஸ்’ என்று எழுதியுள்ளார். சவுத் பென்ட் டிரிபுயுன் உணவு விடுதிக்கு வந்த அந்த மர்ம மனிதன் 165 அமெரிக்க டாலருக்கு சாப்பிட்டு விட்டு 5,000 டாலர்கள் டிப்ஸ் வைத்திருக்கிறார். இங்கும் ‘ஜீசஸ்-க்காக டிப்ஸ்‘ என்று எழுதியுள்ளார். நோட்ரீ டாம் யூனிவர்சிட்டி வளாகத்தில் உள்ள லெஜன்ட்ஸ் உணவு விடுதியில் சாப்பிட்ட பின்னர்,  5,000 டாலர்கள் டிப்ஸ் வைத்துவிட்டு, பில்லில் ‘ பைட் ஆன் ’ என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.  

இதுகுறித்து லெஜன்ட்ஸ் ஓட்டலில் வேலைசெய்யும் ஆஸ்லி ரஸ்ட் குறிப்பிடுகையில், ‘ எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை டிப்ஸ் ஆகப் பெற்றது ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது. யாரும் இவ்வளவு பெரிய தொகையை டிப்ஸ் ஆக தரமாட்டார்கள். இதை தந்தவர்கள் 3 பேர். அவர்கள் கலிபோர்னியாவில் இருந்து வருவதாக தெரிவித்தனர்’ என்றார். 

No comments

Powered by Blogger.