அஷ்ரப் சதுக்க மைதானம் வெள்ள நீரில் மிதக்கிறது (படங்கள்)
(பா.சிகான்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் உள்ள அஷ்ரப் சதுக்க மைதானம் வெள்ள நீரினால் சூழ்ந்து காணப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
பாரமரிப்பற்று பல வருடங்களாக கவனிப்பாரற்று கிடந்த இம்மைதானம் முன்னாள் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்களால் அவ்வப்போது சென்று சிறு சிறு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அம்மைதானத்தின் சுற்றுச்சுவர் அரைகுறையாக கட்டப்பட்டுள்ளதும் மைதானத்தை சுற்றி போடப்பட்டுள்ள அடித்தளங்கள் முறையாக போடப்படாமையினாலும் வெள்ள நீர் நீண்ட காலம் தேங்கி காணப்படுகிறது.
இதனால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் இனிவரும் காலதத்திலாவது வெள்ள நீர் தேங்கி எமது விளையாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள உரிய அதிகாரிகள் உதவுவார்களா என அங்குள்ள விளையாட்டு ஆர்வலகர்கள் கேட்கின்றனர்.


Post a Comment