Header Ads



வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் வீடுகளுக்கு சென்று சிலர் ஏமாற்று நடவடிக்கை

வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் இலங்கை இல்லங்களுக்கு சென்று சிலர் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் உறவினர்களிட தாம் பல சலுகைகள் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் இவர்கள், அப்பாவி உறவினர்களை ஏமாற்றி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இப்படியானவர்களிடம் அவதானமாக இருக்கும் படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.

No comments

Powered by Blogger.