Header Ads



கடும் காற்றுடன், இடிமின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை

அடுத்த சில நாட்களுக்கு கடும் காற்று, இடிமின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேற்கு, ஊவா மாகாணங்களில் இரவும் பகலும் இந்த மோசமான காலநிலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில இடங்களில், 80 கி.மீஇற்கு அதிகமான வேகத்துடன் காற்று வீசும் என்றும், 75 மி.மீ இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து, அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும், கேட்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.