Header Ads



கல்முனையில் சுனாமி ஞாபகார்த்த மத நிகழ்வுகள் (படங்கள்)


(ஏ.பி.எம்.அஸ்ஹர் + யு.எல்.றியாஸ் + எஸ் .எல் .அப்துல் அஸீஸ்)

சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 9ஆண்டுகள் புர்த்தியாவதை முன்னிட்டு கல்முனைப்பிரதேசத்தில் இன்று 26-12-2013 பல்வேறு ஞாபகார்த்த மத நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்முனையில் சாலூரம் அமைப்பினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில் இடம்பெற்ற இந்து மத நிகழ்வில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலர்கலந்துகொண்டு உணர்வபுர்வமாக தமது உறவுகளை நிணைவுகூர்ந்தனர்.இதேவேளை கல்முனை கடற்கரைப்பள்ளி வாயிலிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட துஆப்பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் கல்முனைப்பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் 2 நிமிட அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.






No comments

Powered by Blogger.