சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஒரு துயரமான கடிதம்..!
அஸ்ஸலாமு அலைக்கும்,
சவூதி அரேபியா ரியாத்,
சவூதி அரேபியாவுக்கு வேலை நிமிர்த்தம் வருகை தந்த இலங்கை குடி மக்களாகிய நாங்கள் இங்கு சம்பளப் பிரச்சினை மற்றும் விசா சொந்தக்காரர்களால் ஏமாற்றப்பட்டு போக வலி இல்லாமல் தவிர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
பல காரணங்களினால் வந்த வேலையினை விட்டு தாங்களாகவே சவூதி இல் நல்ல வேலையினையும் இடத்தினையும் ஒரு தொகையினர் தேடிக்கொண்டனர்.
ஆனால் தற்பொழுது பொது மன்னிப்புக்காலம் முடிவடைந்துவிட்டது. சட்ட விரோதமாக வேலை செய்யும் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்று சவூதி அரசு தெரிவித்தது. ஆனால் இன்னமும் அனுப்பபடவில்லை. குறைந்த சிலரே நாடு திரும்பி இருக்கின்றனர். ஏனையவர்கள் நாடு திரும்பவில்லை.
இதற்கு தூதரகம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்ததாவது " பொது மன்னிப்பிற்கு தகுதியானவர்கள் அனைவரும் நாடு திரும்பி விட்டனர் என்று " ஏனைய அனைவரும் அதற்கு தகுதியற்றவர்கள் ஆனால் மீதம் இருப்பவர்கள் எஜமானர்களால எமற்றப்பட்டு அல்லது வேலை தருவதாக கூறி பாலைவனத்திலோ அல்லது மனித நடமாட்டமேயில்லாத இடத்திலோ அனுப்பபட்டவர்கள்.
சிலர் நோயாளிகள், சிலர் சம்பளம் கொடுக்கவில்லை என்று வந்தவர்கள், ஆனால் தற்பொழுது அவர்கள் தூதரக அருகேயும் தூதரகத்திலும் உள்ளனர்,
ஆனால் அவர்களுக்கு எதுவித உணவும் கொடுக்கப்படுவதில்லை, எதுவித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை.
10 மாத காலமாக நாட்டிற்கு போவோம் போவோம் என்று தமது வாழ்வினை தூதரக அருகேயும் பூங்காவிலும் செலவழித்தனர். அனைவரும் நாடு திரும்ப மட்டுமே விருப்பமுள்ளவர்கள். இதற்கு இலங்கை அரசும் தூதரகமுமே இவர்களுக்கு உரிய நடவடிக்கையினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
M .Farvees
.jpg)
Post a Comment