அணு ஆயுதம் சுமந்து கொண்டு இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது
அணு ஆயுதம் சுமந்து கொண்டு எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரிதிவி-2 ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. தரையில் இருந்து பறந்து சென்று தரையில் இருக்கும் இலக்கை தாக்கும் திறன் படைத்தது.
ஒடிசாவின் ராணுவ தளப்பிரிவு பகுதியில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்து. கடந்த 2 மாதங்களில் நடத்தப்படும் இது 3 வது சோதனையாகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பிரிதிவி 350 கி.மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும்.
இன்றை சோதனை 100 சதம் முழு வெற்றியை அடைந்ததாக, டெஸ்ட் ரேஞ்ச் எம்.வி.கே.வி., பிரசாத் தெரிவித்தார். கடந்த அக்டோபர் 7 மற்றும் 8 தேதியில் கடந்த முறை பரிசோதிக்கப்பட்டது. 500 கிலோ அணு ஆயுத பொருளை சுமந்து சென்று தாக்ககூடிய வல்லமை படைத்தது. இந்த பிரிதிவி உலக அறிவியல் முன்னேற்றத்தின் அடிப்படைக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment