அம்பாறை மாவட்ட தேசிய கலை இலக்கிய, சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், கலை விழாவும்
அம்பாறை மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய கலை இலக்கிய மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கலை விழாவும் அண்மையில் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் சிந்தன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பேராசிரியர் சி.மௌனகுருஇ அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன் உள்ளிட்ட கல்வியியலாளர்கள் கலைஞர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் மற்றும் மாவட்ட செயலக கலாசார அபிவிருத்தி உதவியாளர் வை.கே.அனுர சமந்த ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற திறந்த மட்டப் போட்டிகள் மற்றும் பாடசாலை மட்டப்போட்டிகளில் திறமை காட்டி வெற்றி பெற்ற மூவின சமூகங்களையும் சேர்ந்தவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இது தவிர போட்டி நிகழ்ச்சிகளில் முதன்மை நிலை பெற்றவர்களின் கலை நிகழ்வுகள் பல இதன்போது மேடையேற்றப்பட்டன.
இதேவேளை பேராசிரியர் சி.மௌனகுருவின் நெறியாள்கையில் உருவான 'வானவில்லின் வர்ணங்கள்' எனும் சமூக ஒற்றுமையை வலியுறுத்திய சிறப்பு கலை நிகழ்வு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.





Post a Comment