மாளிகா இளைஞர் அமையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு
(ஏ.எல்.ஜுனைதீன்)
மாளிகா இளைஞர் அமையத்தின் ஏற்பாட்டில் க. பொ. த. (சாதாரண) தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கணித பாடக் கருத்தரங்கு கஃமு மாளிகைக்காடு ஸபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றபோது 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கில் மாணவர்களுக்கு ஆர்.எம்.சுல்பிகார் விரிவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் பிரதம அதிதியாகவும் ஸபீனா முஸ்லிம் வித்தியாலத்தின் முன்னாள் அதிபர் ஏ.கே.எம்.நியாஸ் தொழில் அதிபர் அல்ஹாஜ் ஆசாத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற அதிபர் ஏ.கே.எம்.நியாஸின் 10 வருட கால அதிபர் சேவையையும் தொழில் அதிபர் ஆசாத்தின் சமூக சேவையையும் பாராட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் இருவருக்கும் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.



Post a Comment