Header Ads



அரசியல் லாபத்திற்காக கொழும்பின் சனத்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - மங்கள சமரவீர

அரசியல் லாபத்திற்காக கொழும்பின் சனத்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்களில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை மற்றும் கொம்பனித்தெருவைச் சேர்ந்த மக்கள் வேறும் இடங்களில் குடியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வத்தளை, ஜாஎல போன்ற பிரதேசங்களில் இவர்கள் குடியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தெமட்டகொட பிரதேசத்தில் இந்த மக்கள் குடியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்ததாகவும், தற்போது மக்களை கொழும்பிற்கு வெளியே குடியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் இறுதியில் கொழும்பு பிரகடனத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையர்களை சர்வதேச நீதிமன்றில் ஆஜர் செய்யக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலத்தில் ரோமப் பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த அரசாங்கம் கொழும்பு பிரகடனத்தில் கைச்சாத்திட்டு நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் பாரியளவில் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.