ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்பது உண்மையல்ல - மத்திய மாகாண முதலமைச்சர்
(மொஹமட் ஆஸிக்)
இன,மத,மொழி பேதமின்றி சகலருக்கும் சமமான கல்வியை வழங்குவதே தற்போதைய அரசினதும் ஜனாதிபதியினதும் கொள்கையாகும் என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அக்குறணை கசாவத்தை முஸ்லிம் பாடசாலைக்கு பெற்றோர்களதும், நலன் விரும்பிகளினதும் பங்களிப்பினால் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின் நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இவ்வாரும் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் ஆரம்ப காலத்தில் வியாபாரத்தையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தனர். ஆனாலும் 2005 ம் ஆண்டுக்கு பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க முன் வந்ததால் முஸ்லிம் மாணவ மாணவிகள் கனிசமான அளது தற்போது கல்வி கற்கின்றனர். இதனை பல்கலைகழகங்களுக்க சென்றால் பார்க்க முடியும். நாங்கள் நாட்டில் இன மத மொழி பேதமின்றி கல்வி வழங்குவதனால் நாங்கள் இன் நாட்டின் வளர்ச்சிக்கி பங்களிப்பு செய்கினறோம்.
ஆனாலும் தேர்தல் காலங்களில் சிலர் வந்து ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்று கூறி வாக்குகளை பெற்றாலும் உன்மையான நிலை அதுவல்ல. ஜனாதிபதி இன் நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாகவே இருக்கின்றார். எனவே அவர் ஒரு போதும் இன மத பேதம் பார்த்து எவ்வேலையையும் செய்வதில்லை என்றம் கூறினார்.
அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் உற்பட பலர் இதில் கலந்து கொண்டதுடன் மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.




Post a Comment