Header Ads



வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டியதொன்று..!

(ஜாவிட் இப்றாஹீம்)

பொதுவாக வங்கிகளில் அனேகமானோர் நடைமுறைக் கணக்கு வைத்திருக்கின்றனர். வங்கியிலிருந்து பணம் மீளப்பெறும்போது காசோலை மூலமாகத்தான் பணம் பெறுகின்றனர். காசோலையில் தெளிவாக எழுதி திகதியும் குறிப்பிடவேண்டும் குறிப்பிட்ட திகதிக்கு முன் வங்கியிலிருந்து பணம் பெறமுடியாது இதுதான் உண்மையான யதார்தமாகும். எல்லோரும் தெரிந்த விடயமே.

நான் குணசிங்கபுர Hatton National Bank 12 வருடங்களுக்கு முன் நடைமுறைக்கணக்கொன்றை ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் வரைக்கும் அதாவது இன்று வரைக்கும் நன்றாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன.; நான் சென்ற 25-10-2013ல்  சாமான்கள் வாங்கிக்கொண்டு காசோலையொன்றைக் கொடுத்துள்ளேன். இந்த அனியாயத்தைக் வங்கியில் கேட்டதற்காக எனது கணக்கு மூடப்பட்டுள்ளது. இங்கே எனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படடுள்ளது 

காசோலை 24-10-2013ல் வங்கிக்குச் சென்றுள்ளது என்பது வங்கிக்குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. காசோலையைத் திருப்பியது மட்டுமல்ல, எனது கணக்கில் இருந்து Rs 2500  வை வங்கி தண்டனைப் பணமாகப் பெற்றுள்ளது. இது மாபெரும் அனியாயம். நான் இரண்டு முறை வங்கிக்குச்சென்று காசோலையைத் திருப்பினால்  பறவாயில்லை. எனது Rs 2500  மீளளிக்கும்படி கேட்டேன் வங்கி மனேஜர் அது தரமுடியாது என்று  சொல்கின்றனர், ஒரேவார்தையில் மறுத்துவிட்டனர். வங்கியே தவறையும் செய்துவிட்டு பணத்தையும் நவீனமுறையில் கொள்ளையடித்துள்ளது. தனிப்பட்ட முறையில் கேட்டுப்பயன் இல்லை என்ற காரணத்தினால் இப்போது மக்கள் மத்தியில் தெரிவிக்கிறேன். இந்த அனியாயத்தைக் வங்கியில் கேட்டதற்காக எனது வங்கிக்கணக்கு மூடப்பட்டுள்ளது. இங்கே எனது அடிப்படைஉரிமைகள் மறுக்கப்படடுள்ளது. எனது பணம் Rs 2500  எனக்கு வர வேண்டும்.    எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிகிடைக்கும் வரை போராடுவேன்...!

2 comments:

  1. 1929ம் ஆண்டு மாற்று உண்டியல் சட்டம் காசோலைகள் பற்றிய சட்டத்தினை கூறுகின்றது.2006ம் ஆண்டின் திருத்திய சட்டத்தின் படி,கணக்கில் போதிய தொகை இல்லாமல் காசோலை வரைவது சட்டப்படி குற்றம்.மேலும்,தீர்வைகாக சமர்பிக்கப்படும் காசோலைகள் உரிய தினத்தில் காலை7.00 மணிக்கே கணக்கில் வைப்பில் இடப்படும்.எனவே,காலை 7.00மணிக்கு உங்களது கணக்கில் பணம் இருந்திருக்க வேண்டும்.இது தான் இலங்கையில் காசோலைகள் சம்மந்தப்பட்ட திருத்திய சட்டம்.எனவே,இது சம்பதாமாக மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் வேறு ஒரு வங்கி முகாமையாளரையோ சட்டதரனிகளையோ அணுகி தெளிவு பெற்றுகொள்ளுங்கள்.

    இவ்வாறான செய்திகளை வெளியிடும்போது அதன் சட்ட திட்டங்கள் பற்றி உரியவர்களிடம் அல்லது சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறுவது செய்தி ஆசிரியர்களுக்கு சிறந்தது என கருதுகிறேன்.ஏனெனில்,ஒரு வங்கியின் இலச்சினையையும் பெயரையும் பயன்படுத்தி தவறான செய்தியை வெளியிட்டுள்ளமை வங்கியின் நன் மதிப்பு சம்மந்தப்பட்ட விடயம் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  2. நமது நாட்டில் அதிக அளவில் வாடிக்கையலர்களிடம்மிருந்து தேவைல்லாமல் தண்டப்பணம் அறவிடும் வங்கிகளில் இதுமுதலாவது இடத்தில் இது உள்ளது நானும் அதிகளவான பணத்தை இந்த வங்கியில் இழந்துள்ளேன் நீங்கள் இஸ்லாமியவங்கி ஒன்றை நாடலாமே.

    ReplyDelete

Powered by Blogger.