கொள்ளையர்களினால் கோடாரி கொத்திற்கு இலக்காகிய மாணவன் மரணம்
(Tm) கொள்ளையர்களினால் கோடாரி கொத்திற்கு இலக்காகிய மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை (04) புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடாரியினால் கொத்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிடரிப்பகுதியில் கடுமையான காயமேற்பட்டிருந்த மகனான சண்முகநாதன் யதுர்ஷனன் (19) என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளார்.
யதுர்ஷனன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது
.jpg)
Post a Comment