சமூகசேவையாளரும், தர்மகர்த்தாவுமான பி.எஸ்.அப்துல்லா காலமானார்
சிறந்த சமூகசேவையாளரும்,தொழிலதிபரும்,தர்மகர்த்தாவுமான வவுனியா பி.எஸ்.அப்துல்லா அவர்களின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது கவலை தெரிவித்துள்ளதுடன்,அன்னாரின் சுவன வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்தோனோசியவில் இடம் பெரும் அரச நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள அமைச்சர்,மர்ஹூம் பி.எஸ்..அப்துல்லா அவர்களின் வபாத் செய்தி கேள்வியுற்றதும்,தமது கவலையினை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் பீ.எஸ் அப்துல்லா வவுனியா மக்களால் மட்டுமல்ல வடமாகாண மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர்.குறிப்பாக வவுனியா நகர பள்ளிவாசல்,வவுனியா முஸ்லிம் கலாசார நிலையம் உள்ளிட்ட பல்வேறு உருவாக்கங்களுக்கு காரணமானவர்.நீண்டகாலமாக நகர பள்ளி பரிபாலன சபையின் தலைவராக,காப்பாளராக இருந்து இம்மாவட்ட மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர்.எதையும் மிகவும் நிதானத்துடனும்,துார சிந்தனையுடனும் செய்யக் கூடியவராக மர்ஹூம் அப்துல்லா இருந்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தில் கண்கானிப்பு குழுவின் உறுப்பினராக இருந்து இப்பிரதேச மக்களது பல்வேறு தேவைகளை கவனத்திற் கொண்டு உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளதானது அவர் இம்மாவட்ட அனைத்து இன மக்கள் மீது கொண்டிருந்த அன்பினதும்,இனவுறவினதும் வெளிப்படைத் தன்மையாகும்.
அன்னாரின் இழப்பு வவுனியா மாவட்ட மக்களுக்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும்,மாவட்ட மக்களுக்கும் தமது அழ்ந்த கவலையினை தெரிவிப்பதுடன்,அன்னாரின் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment