கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் தின நிகழ்வுகள் (படங்கள்)
கல்முனை ஸாஹிராக்கல்லூரி க.பொ.த.சாதாரணதர மாணவர்கள் தின நிகழ்வுகள் இன்று கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் பகுதித் தலைவர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் பிரதம அதிதியாகவும் , கல்லூரி பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா கௌரவ அதிதியாகவும் கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , ஓய்வுபெற்ற மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஸ்தாபக அதிபர் ஏ.எம்.இப்றாஹிம் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் அதி திறமையான சித்தி பெற எதிர்பார்க்கும் 20 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.







Post a Comment