நெல்சன் மண்டேலா மறைவு - ரவூப் ஹக்கீம் அனுதாபம்
விடுதலைப் போராளியும் தென்னாபிரிக்காவின் முதலாவது கருப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாஅவர்களதுமறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமானரவூப் ஹக்கீம் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தி,
அடக்குமுறையின் இருண்டவாழ்வில் இருந்து தென்னாபிரிக்க மக்களைவிடுவித்து, ஒளியேற்றிய நமதுயுகத்தின் விடுதலை விடிவெள்ளி நெல்சன் மன்டேலா அவர்கள் அவரின் பணியை செவ்வனே நிறைவேற்றியவராக அவர் நமது வாழ்நாளில் வாழ்ந்தமாபெரும் ஜனநாயகப் போராளியும் விடுதலை வீரருமாவார்.
வீர புருஷர்களின் மறைவு வெறுமனே துக்கதினமாகநினைவு கூறப்பட்டு மறக்கப்படுவதை விடவும் அவர்களின் வாழ்வுநெறி,வழிகாட்டுதல்,மனித நேயசெயற்பாடுகள் என்பன பின்பற்றப்படவேண்டும் என்பதே தலைவர் மண்டேலா அவர்களது கோட்பாடாக இருந்தது. அம்மானிதரின் வார்த்தைகளிலேயேஅதனைஅவர் இவ்வாறுவிபரிக்கிறார்.
'அடிப்படையில் நான் எதிர்காலம் பற்றியநம்பிக்கைவலுவுள்ளவன். அது இயற்கையாகவா? அல்லது சூழல் காரணமாகவாஎன்னுள் உருவானதுஎன்பதைநான் அறியேன். ஒருதன்னம்பிக்கைவாதிஎப்போதும் தன் பார்வையைவானத்திற்கப்பால் ஊன்றியவனாக இருந்தாலும் அவனதுபாதங்களை அத்திசைநோக்கிநகர்த்தியவனாகத்தான் இருப்பான்.'என்று சுயநிலைவிமர்சனம் செய்கிற மண்டேலா அவர்கள்,'மனிதநேயம் சார்ந்தஎன் கொள்கைப்பிடிப்புபல இருண்ட,வரண்டஅனுபவங்களால் மோசமாகசோதிக்கப்பட்டது. ஆனாலும் ஒருபோதும் நான் என்னைஅவ்விருளுள் தொலைத்துவிடவோஎன் நம்பிக்கையைதளர்த்திக் கொள்ளவோ இல்லை. தோல்வியையும் சாவையும் தரும் பாதையில் நான் வெற்றியைநோக்கிநகர்ந்தேன்'என்கிறார்.
'ஒருமலைத்தொடரின் மலையுச்சியை அடைந்தவுடன் இலக்கை எட்டிவிட்டதாக எண்ணி,ஓய்வுகொள்ளமுடியாது. நாம் ஏறவேண்டிய இன்னும் பலமலைமுகடுகள் உள்ளனஎன்பதைபுரிந்துகொள்ளவேண்டும். நான் கடந்துவந்த பாதையை திரும்பிபார்த்து மகிழ்கிறேன். ஆனாலும் என் பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை'என்றுவிடுதலைபெற்றுக் கொடுத்ததுடன் தன் கடமைமுடிந்துவிட்டதாகதிருப்திஅடையாதபொருப்புணர்வுமிக்கதலைவராகமண்டேலாஅவர்கள் இருந்தார்கள்.
தன்னம்பிக்கைமனிதநேயம் என்பனவற்றின் மொத்த உருவாக வாழ்ந்து பிரிந்துசென்றுள்ளதலைவர் மண்டேலாவுக்காகபிரார்த்திக்கும் அவரின் மனைவிகிரேஸா மிச்சேல் அம்மையார்,அவரின் குடும்பத்தினர்,தென்னாபிரிக்கமக்கள் ஆகியோருடன் நானும் என் கீழுள்ள நீதி அமைச்சை சேர்ந்தவர்களும் ஸ்ரீலங்காவாழ் மக்களும் இணைந்துகொள்கிறோம்.
ரவூப் ஹக்கிம்
நீதிஅமைச்சர்
தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
.jpg)
Post a Comment