மருதமுனை மக்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது - ஹிஸ்புல்லா, ஹரீஸ் இணைந்து நடவடிக்கை
ஆழிப் பேரலையால் பாதிக்கப் பட்ட மருதமுனை மக்களுக்கு பிராஞ்ச் சிட்டி வீட்டுதிட்டத்தில் உள்ள மிகுதி வீடுகளை இன்னும் ஓரிரு தினங்களில் தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கைபட்டுள்ளது. இன்று 09.12.2013 குறித்த சென்ற பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலமயிலான குழுவினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் .
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசின் அழைப்பின் பேரில் மருதமுனைக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரக்கீப்,முஸ்தபா ,அலி உட்பட ஊர் பலரும் கலந்து கொண்டனர் .
இந்த வீட்டுதிட்டத்தில் குறைபாடாக காணப்படும் வீதிகளை நிர்மாணிப்பதற்கு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்ல மாவட்ட அதிகாரி அன்வர்தீன்,மாவட்ட செயலக பொறியியலாளர் ராசீக் ஆகியோருக்கு வீதிகளுக்கான மதிப்பீட்டரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஊடாக சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.



Post a Comment