Header Ads



நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் அனைத்து துறைகளும் செயலிழந்து விட்டன

இலங்கையில் அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால் கசினோ சூதாட்டமாகும் எனவும் கட்சி, மத, இன வேறுபாடுகள் இன்றி அனைவரும் அதனை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற கசினோ எதிர்ப்பு கருத்தரங்கொன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு தேசியப் பிரச்சினை. இதற்கு இன, மத பேதமில்லை. இதனால் கசினோ என்ற அனர்த்தத்திற்கு எதிராக சகல இன, மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். கசினோ சூதாட்டம் கொழும்பில் மட்டுமல்ல, கட்டான பிரதேசத்திற்கும் பரவி செல்லுமாம். கசினோ வலயம் ஏற்படுத்தப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் கசினோவை எதிர்க்கின்றன. புத்த பகவான் சூதாட்டத்தை முற்றாக எதிர்த்தார். மது, சூதாட்டம் காரணமாக மனிதன் வாழ்க்கையை இழந்து விடுவான்.

கசினோவை நாட்டில் அமுல்படுத்த வேண்டுமானால் அதனை அரசாங்கம் அரசியல் அமைப்புக்குள் சேர்க்க வேண்டும். இதனையே அரசாங்கம் மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. நாட்டில் அமுலில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை காரணமாக நாடாளுமன்றம், சட்டத்துறை என அனைத்து துறைகளும் செயலிழந்து விட்டன. சட்டத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்றார்.

No comments

Powered by Blogger.