Header Ads



வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் கவனத்திற்கு..!

(Adt) வேலை வாய்ப்பு பெற்று வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விமானநிலையத்தில் பதிவு செய்யத் தேவையில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியளம் தெரிவித்துள்ளது. 

தொழில் ஒப்பந்தம் குறித்து விமான நிலையத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எந்தவொரு நபரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று நாட்டை விட்டு வெளியேற முன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் விமான நிலையத்தில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

எனினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். 

No comments

Powered by Blogger.