Header Ads



ஹரீஸ் எம்.பி.யின் அழைப்பில் கல்முனையில் ஹிஸ்புல்லா


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதோ ஒருங்கிணைப்புக்குழவின் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பையேற்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று 08-12-2013 கல்முனைக்கு விஜயம் செய்தார்.

சாய்ந்தமருது பொலிவேரியன் வீடமைப்புத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்மைப்பு வேலைத்திட்டங்களைப்பார்வையிட்டதுடன் இதற்காக 5கோடி ருபா நிதியொதுக்கீடு நெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.இது தொடர்பான உயர் மட்ட கூட்டமொன்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.அதன் பின்னர் மருதமுனை மேட்டு வட்டை கிராமத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டார்.


No comments

Powered by Blogger.