Header Ads



முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிய, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தடை

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடையை விதித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்தார்.

இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரினர்.

எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முகத்தை தவிர தலை உட்பட உடலில் ஏனைய இடங்கள் மறையும் வகையில் ஆடைகளை அணிய முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

2 comments:

  1. படித்தவனாக இருந்தாலும் அயோக்கியத்தனத்துக்கு குறைவில்லையே. ஒழுக்கத்தை சீண்டி விளையாடும் இக்கயவர்களின் பிடிக்குள் சிக்குண்டு படிப்பைத் தொடரவேண்டிய பரிதாப நிலையில் இந்த முஸ்லிம் யுவதிகள். அல்லாஹ் போதுமானவன். துப்பாக்கியை, கத்தியை காட்சட்டைக்குள், இடுப்பில் ஒழித்து வரும் மாணவர்கள் பிடிபட்டால் பாதுகாப்புக்கருதி காட்சட்டையைக் கழற்றிவிட்டு வரச் சொல்வார்களோ??? இஸ்லாமிய ஒழுக்கத்தைக் கலைவதற்காக சாக்குப் போக்குக் கூறும் கேடு கெட்ட படிப்பாளிகள்.

    ReplyDelete
  2. we need to understand the security also. It is ok that they can show their faces- nothing wrong with that.

    ReplyDelete

Powered by Blogger.