Header Ads



கம்பளை சாஹிரா கல்லூரி, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சொத்து - என்.எம்.அமீன்


(எம்.எம்.எம். ரம்ஸீன் மொஹொமட் ஆஸிக்)

கம்பளை சாஹிரா கல்லூரி கம்பளை வாழ் முஸ்லிம்களின் சொத்து அன்றி இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சொத்து என்ற அடிப்படையில் அதனைக் கட்டியயெழுப்ப முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 30.11.2013 கடந்த சனிக்கிழமை கம்பளை சாஹிரா கல்லூரியில் நடாத்திய கம்பளை பகுதி பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

மர்ஹும் காயிதே மில்லத் பதியுந்தீன் மஹ்மூந் கம்பளை சாஹிரா கல்லூரியை முஸ்லிம் மாணவர்களுக்கான ஒரு பல்கலைக்கழகமாகவே கட்டியெழுப்பினார்;. இதன் அடிப்படையில் இத்தகையை வசதிகளைக் கொண்ட ஒரு பாடசாலையை  தற்போது கூட இலகுவில் உருவாக்க முடியாது. ஆனால் கம்பளை சாஹிரா கல்லூரி சமூகத்திற்கு எத்தகையை வெளியீகளை வழங்குகின்றது என்பதைப்  பற்றி சிந்திக்காமலிருக்க முடியாது. கடந்த வருடங்களில் பல்கலைக்கழக நுழைவுகள் கூட பூச்சியமாகவே காணப்படுகின்றது. இப்பாடசாலையில் சகல வசதிகளுடன் மூன்று விஞ்ஞான ஆய்வுகூடங்கள் மற்றும் கணணிப்பிரிவுகள் காணப்படுகின்றன. ஆனால் இத்தகைய வளங்கள் மூலம் சமூகம் பயனடையவில்லை. இதனால் கம்பளைக்கு அருகில் இருக்கும்  பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கூட  வருடாந்தம் கம்பளை சாஹிரா கல்லூரி மாணவர்களை அனுப்பவில்;லை என்றால் சமூகத்தின் கல்வி நிலை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. இப்பாடசாலை கம்பளை முஸ்லிம்களுக்காக மட்டும் பதியுந்தீன் மஹ்மூந் அவர்களால் உருவாக்கப்படவில்லை. இது முழு நாட்டு முஸ்லிம்களினதும் சொத்து ஆகும். இதனைப் பாதுகாத்து இதன் மூலம் பயனடைவது சமூகத்தின் பொறுப்பு ஆகும்.

இளந்தலைமுறையினர் தற்காலத்தில் பேஸ்புக் விடயங்களில் அதீத அக்கறை காட்டி வருகின்ற நிலையில் வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்து வருகின்றது. எனவே பெற்றோர் நூல்களையும் தினசரிப் பத்திரிகைகளையும் வாங்கிக் கொடுத்து குழந்தைகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும். இணையம் மூலம் அறிவின் வாசல் விசாலமாகத் திறகக்ப்பட்டுள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஊடகக் கல்வி மாணவர்களுக்கு இன்றிமையாததாகும். ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் ஊடகங்கள் மகத்தான பங்களிப்பு நல்கி வருகின்றன. எனவே பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடகத்துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது என்றார். 


  


No comments

Powered by Blogger.