Header Ads



அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த 3 நாள் சாரணர் பயிற்சிப் பாசறை


(யு.எம்.இஸ்ஹாக்) 

அக்கரைப்பற்று -கல்முனை  மாவட்ட சாரணர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை  மாளிகை காடு  அல் -ஹுசைன் வித்தியாலயத்தில்  வெள்ளி,சனி.ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம் பெற்ற மேற்படி பாசறைக்கு  கல்முனை  பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம்  பிரதம அதிதியாகவும் மாளிகைகாடு அல் -ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.நளீர்   கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர் 

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி ,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி , பெரிய நீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயம்,கல்முனை இராம கிருஸ்ண  மகாவித்தியாலயம்,நிந்தவூர் அல் -அஸ்ரக்  தேசிய பாடசாலை ,மாளிகைகாடு அல் -ஹுசைன் வித்தியாலயம் ,சாய்ந்தமருது மல்ஹருஸ் சம்ஸ் வித்தியாலயத்தை   சாரண மாணவர்கள் இந்த சாரணர் பாசறையில் கலந்து கொண்டனர்.

சாரணர் பாசறைக்குப் பொறுப்பான ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை  கல்லூரி  உடட்கல்விதுரை விரிவுரையாளர்  எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் உதவி சாரண பயிற்சி ஆணையாளர் கே.எம்.தமீம் , மற்றும் எம்.ஏ.சலாம் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்கள். நிகழ்வில் மரநடுகை ,மாணவர்களின்  கலை நிகழ்வு என்பனவும் பங்குபற்றிய  சாரணர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றது.




No comments

Powered by Blogger.