அம்பாறையில் வெள்ளப்பெருக்கு மக்களுக்கு பெரும் பாதிப்பு - அரசியல் வாதிகளே காரணம் (படங்கள் இணைப்பு)
(யு.எல்.எம். றியாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் அடைமழையை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (04.12.2013) தொடக்கம் கல்முனை அம்பாறை பிரதான வீதியில் உள்ள மாவடிப்பள்ளி தாம்போதிக்கு மேலாக வெள்ளநீர் பய்ந்தோடுகின்றது இதனால் கல்முனை அம்பாறை வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சிறிய ரக வாகனங்கள் செல்வதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரதான போக்குவரத்துப் பாதைகளுள் ஒன்றான இப்பாதையில் உள்ள இம் மதகு மிகவும் பழமை வாய்ந்த ஒரு மதகாகும் ஆனால் மழைகாலங்களில் இப்பாதையை மக்கள் பயன்படுத்துவதில் பல சிரமங்களை எதிர் கண்டு வருகின்றனர். பல அமைச்சர்களும், பாராளுமன்ற பிரநிதிகளும் ,மாகான அமைச்சர்களும் இருக்கும் இந்த மாவட்டத்தில் இப்பாலம் மழை காலங்களிலும் எவ்வித தடையுமின்றி போக்குவரத்து செய்யாக் கூடிய வகையில் இப்பாலத்தினை புனரமைப்பு செய்யாமல் இருப்பது இப்பிரதேச மக்களுக்கு பெரும் சாபக்கேடாகும்.
இலங்கையை பொருத்தமட்டில் இன்று எத்தனையோ பாலங்கள் அமைத்து போக்குவரத்துக்களை சீர் செய்யும் இக்காலகட்டத்தில் இம்மாவட்ட அரசியல்
வாதிகளின் கண்களில் இப்பாலம் மட்டும் அவர்களுடைய கண்களுக்குப் புலப்படாமல் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகவே இதைப் பார்க்கமுடியும்.






NO NO THEY ARE WAITING FOR NEXT ELECTION MEETING DON'T HAVE A TITLE
ReplyDeleteSO THIS BRIDGE TITLE WE CAN PUBLISH AND GET A VOTE