Header Ads



ஒலுவில் கடல் அரிப்புக்கு, முழு காரணம் துறைமுகம் வந்ததே


(எஸ். சியான்)

ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்று கொண்டு இருக்கின்ற கடல் அரிப்புக்கு முழு காரணமும் ஒலுவில் துறைமுகம் வந்ததுதான் என்று அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 இதற்க்கு முன்பு இவாறான கடலரிப்புக்கள்  முன்பு பல தடவைகள் வந்தும் எந்த அரசியல் வாதிகளும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்க்கு முன்பு 6 தடவைக்கு மேலாக இவ்வாறான கடலரிப்புக்கள்  நிகழ்துள்ள நிலை இல் இது பாரதூரமானது என்றும் மக்கள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது கடல் தொழிலை நம்பி இருக்கும் மீனவர்களின் வாடிகள், மீன்பிடி உபகரனம்கள் மட்டுமல்லாது 1000 கணக்கான தென்னை மரங்கள் இதுவரை கடலால் அடித்து செல்லபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வுகளை உடனடியாக பெற்றுக் வேண்டியது உரிய அதிகாரிகளினதும் , அரசியல்வாதிகளினதும் கடமையாகும்.






No comments

Powered by Blogger.