அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
(எஸ்.ரீ. ஜமால்டீன், ஏ.பீ. அப்துல் றஹூமான்)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரியின் அதாஉல்லாஹ் கேட்போர் கூடத்தில் நேற்று (2013.12.05) கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் கலந்துகொண்டதுடன் , அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காஸீம,; யுனிசெப் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான நிபால் அலாவுடீன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதம அதிதி, கல்லூரி அதிபர் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர். தேசிய, மாகாண, வலய ரீதியல் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிண்ணங்கள், பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.





Post a Comment