Header Ads



'எம்மாலும் முடியும்' - கல்முனையில் மாற்றுத் திறனாளிகளின் கலை கலாசார நிகழ்ச்சி

(யு.எம்.இஸ்ஹாக்)

தடைகளை வெற்றி கொண்டு உள்ளீட்டு சமுகத்தினை நோக்கி பிரவேசிப்போம் என்ற தொனிப் பொருளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளின் சர்வதேச தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை 05.12.2013  கல்லூரி நல்ல தம்பி மண்டபத்தில் நடை பெற்றது.

எம்மாலும் முடியும் என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை வெளிக் காட்டும் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் அவர்களின் திறமையை கௌரவித்து பரிசு வழங்கும் நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் வே.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிகளாக கிழக்கு மாகாணத்துக்கான சர்வோதய இணைப்பாளர் வீ.ஜீவராஜ் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 இன்றய நிகழ்வில் பங்குபற்றிய மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் அவர்களை வழிநடாத்தும் ஆசிரியைகளுக்கும் திருகோணமலையிலிருந்து வருகை தந்த தாவூத் உவைஸ் தலைமையிலான  கல்லூரியின் 1978 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் பெறுமதியான அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இக்கல்லூரியின் பழைய மாணவியான கல்முனை மாநகர முதல்வரின் துணைவியார் மிஸ்றியா என்.காரியப்பரினால் மாற்றுத் திறனாளிகளின் கல்வி மேம்பாட்டுக்காக 25ஆயிரம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.





No comments

Powered by Blogger.