Header Ads



பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு

பாபரி மஸ்ஜித்  இடிப்பைக் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய அளவில் நடத்தவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்காக பாபரி மஸ்ஜித் போஸ்டரை அது டிசம்பர் 3 அன்று வெளியிட்டுள்ளது.

ஹிந்துத்துவா குண்டர்களால் 1992ம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை நாமறிவோம். அதனைக் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வருடந்தோறும் நாடு முழுவதும் சமூக, அரசியல் கருத்தரங்குகளையும், பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.

இந்த வருடம் டிசம்பர் 6ம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் வைத்து முக்கிய கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறவிருக்கிறது. இதில் பல இஸ்லாமிய இயக்கங்களும் கலந்து கொள்கின்றன. டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை ஆனதால் ஜும்ஆவிற்குப் பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாசிசத்திகெதிரான போஸ்டர் பிரச்சாரம் நாடு முழுவதும் நடத்தப்படும். இந்த போஸ்டரில் LEST WE FORGET (என்றும் நம் நினைவில்) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை  வலியுறுத்தியும், பாசிசத்தை அழிக்க வேண்டியது குறித்தும் அதில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்தப் போஸ்டரை பாப்புலர் ப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம். ஷெரீப் அவர்கள் வெளியிட்டு, போஸ்டர் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். பொது செயலாளர் ஒ.எம். அப்துஸ் சலாம், டெல்லி மாநில தலைவர் அன்சாருல் ஹக், தேசிய செயற்குழு உறுப்பினர் யா மொஹைதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பிரதிநிதி மௌலானா ஷாதாப் அஜீஸ் காசிமி ஆகியோர் உடன் இருந்தனர். thoo

No comments

Powered by Blogger.