ரெயின்போ பாலர் பாடசாலையின் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும்
(ஹாசிப் யாஸீன்)
ரெயின்போ பாலர் பாடசாலையின் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் 25-12-2013 மாலை மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ரெயின்போ பாலர் பாடசாலையின் தவிசாளர் ஏ.எம்.அஹூவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் துறைப்பணிப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், காரைதீவு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.பாயிஸ், அல்_ஹூசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர், மாளிகைக்காடு மஸ்ஜிதுல் சாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஸ் ஏ.ஏ.ஜெமீல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பவற்றை நிகழ்வின் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் சேவையினையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.





Post a Comment