சவூதி அரேபியாவை குற்றம்சாட்டுகிறது ஹிஸ்புல்லா
(Nf)
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா உள்ளதாக ஹிஸ்புல்லா இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுடன் சவுதி அரேபிய புலனாய்வுப் பிரிவினர் தொடர்புபட்டுள்ளதாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஹசன் நஸ்ரூல்லா குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆகியன சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு ஆதரவு வழங்குவதுடன், சவுதி அரேபியா சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியாக கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், நஸ்ரூல்லாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சவுதி அரேபியா எந்தவித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment