Header Ads



4 முஸ்லிம் நாடுகளிடையே பொதுவான நாணயம் (பணம்) அறிமுகப்படுத்த திட்டம்


வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் நான்கு நாடுகள் டிசம்பர் முடிவில் பொதுவான நாணய அலகொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக பஹ்ரைன் நாட்டின் அக்பர் அல் கலீஜ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைட், பஹ்ரைன், கட்டார் மற்றும் சவூதி அரேபிய ஆகிய நான்கு நாடுகள் ஒன்றிணைந்து டொலருக்கு நிகரான நாணய அலகொன்றை அறிவிக்கவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதில் அரசியல் காரணத்திற்காகவே டொலரை ஒத்த நாணய அலகு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கு பொருளாதார காரணங்கள் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் தீர்மானம் நிறைவேற்றும் வட்டத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரை மேற்கொள்காட்டியே மேற்படி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் 1981ம் ஆண்டு நிறுவப்பட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் ஏனைய இரு நாடுகளான ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இந்த பொது நாணய அலகில் இணைய வாய்ப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. tN

No comments

Powered by Blogger.