Header Ads



சிறைச்சாலைகளில் உள்ள 35 வயதுக்கு குறைவான கைதிகளுக்காக தனிப் பாடசாலை

(Sfm) சிறைச்சாலைகளில் 35 வயதுக்கு குறைவான கைதிகளுக்காக கல்விப்பொதுத் தராதர உயர்தரம் வரையான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலையொன்றை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதனை எதிர்வரும் மார்ச் மாதமளவில் வடரெக்க பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு திணைக்களத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக 150 சிறைக் கைதிகளைக் கொண்ட குழுவுக்கு குறித்த பாடசாலையில் அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் காமினி குலதுங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.