Header Ads



கல்முனை ஸாஹிரா மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள்)


(ஹம்தி ஜெஸ்மின்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 320  மாணவர்களிடையே  திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்  நிகழ்வு கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

க.பொ.த.சாதாரணதர பகுதித் தலைவர் எம்.எஸ்.முஹம்மட்  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  பிரதம அதிதியாக  கல்லூரியின் பதில் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹம்ஸா  கலந்து கொண்டார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சகல பாடங்களிலும் ஏ அதிதிறமைச்சித்தி பெறுவார்கள் என எதிர்பார்க்கும் 20 மாணவர்களும் கிழக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற கணிதவினாடிவினா போட்டியில் பதக்கம் வென்ற ஏ.எம்.சஸ்னியும்  பரிசு  வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 



No comments

Powered by Blogger.