பாதையை பாதுகாத்துத் தருமாறு, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் (பட இணைப்பு)
(ஜே.எம்.ஹாபிஸ் - மொஹொமட் ஆஸிக்)
கண்டி கலகெதர பிரதேசத்தை சேர்ந்த கல்வெட்டிகந்த ( இன்று 2013 11 10 பி.ப ) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மேற்படி பாதை பிரதேச மக்களால் தனிப்பட்ட பங்களிப்புடன் கொண்;க்ரிட் போடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும் இக் கிராமத்திற்கு ஊடாக செல்லும் தனியார் இறப்பர் தோட்டம் ஒன்றில் உரிமையாளர் இப் பாதையின் ஊடாக பெக்கோ இயந்திரம் உற்பட கனரக வாகனங்களை எடுத்துச் சென்றதால் பாதை பழுதடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை உடன் நிறுத்துமாறு கோறிக்கை விடுத்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதே நேரம் மேற்படி தோட்டத்திற்கு மாற்றுஈட்டுப் பாதை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆண் பெண் சிறுவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சுலோகங்களை ஏந்திய வன்னம் ஆர்ப்பாடட்த்தில் ஈடு பட்டனர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.


Post a Comment