Header Ads



வெளிநாட்டு இணைகளைத் தேடிச் செல்லும் சவூதி மக்களின் மனநிலை..!

(Inne) கடந்த ஆண்டு 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும், 17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று சவூதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதே காலக் கட்டத்தில் 55 சவூதி ஆண்கள் ஆஃப்கானியப் பெண்களையும் 27 பேர் வங்கதேசப் பெண்களையும் மணந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி சட்டப்படி, 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களே வெளிநாட்டுக் கணவரைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவர். அந்த வெளிநாட்டவர் உறவினராக இருக்கும் நிலையில், அப்பெண்ணால் அது நிரூபிக்கப்பட்டால், இந்த வயது வரம்பு 21 ஆகத் தளர்த்தப்படும்.

அதுபோன்றே, சவூதியரல்லாத அயல்நாட்டுப் பெண்ணை மணமுடிக்க விரும்பும் சவூதி ஆண்கள் 30 வயதை அடைந்திருக்க வேண்டும்.  ஆயினும், அப்பெண் தனக்கு உறவினரே என்பதை சவூதி மணமகன் நிரூபித்தால், வயது வரம்பு அவருக்கு 25 ஆகக் குறைக்கப்படும். மேலும் அயல்நாட்டுப் பெண்ணை மணமுடிக்க விரும்பும் சவூதி குடிமகன் தான் பணியில் இருப்பதையும், தனக்கு நிரந்தர வருமானம் இருப்பதையும் நிரூபிக்க வேண்டும்.

வெளிநாட்டு இணைகளைத் தேடிச் செல்லும் சவூதி மக்களின் இந்த மனநிலை மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது என்று சவூதி சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஃபுவாத் அல் முஷைக்காஸ் என்பவர் கூறும்போது, "பொதுவாக, உறவினர்கள் அல்லது அடுத்துள்ள கோத்திரத்தினர் என்றே மணச் சம்பந்தம் செய்து கொள்ளும் சவூதிகள் மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன் மண உறவு கொள்வது அதிகரித்து வருகிற நிலையில், வேலைக்குச் செல்லும் பெண்களே பிற நாட்டவரை மணக்க முன்வருகின்றனர்"  என்றார்.

அயல்நாட்டவரை மணக்கும் சவூதி பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு சவூதி குடியுரிமை கோரமுடியாது என்பதும் அறியத்தக்கது.

No comments

Powered by Blogger.